விளக்கம்வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பொருள்:
ஓயாத அலைகளை உடைய பாற்கடலில் துயில் கொண்டிருப்பவனும், அந்த பாற்கடலை கடைவதற்காக கூர்மமாக அவதாரம் எடுத்த மாதவனை, கேசி என்ற அசுரனை வதம் செய்த கேசவனை, நிலவு போன்ற அழகிய முகத்தை உடைய ஆயர்குலப் பெண்கள் வணங்கி பாவை நோம்பு கடைபிடித்தார்கள். கண்ணனிடம் மன்றாடி அவனது அருளை பெற்றனர். அவர்கள் பாவை நோன்பு இருந்த விதம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் தலத்தில் பிறந்த நம்மாழ்வாரின் மகளான கோதை, அழகிய தமிழால் பாடி பாடல்களாலேயே மாலை சூட்டினாள். அவள் பாடிய இந்த 30 பாடல்களையும் பாடி அழகிய இரு தோள்களை உடையவனும், சிவந்த அழகிய கண்களை உடையவனும், செல்வத்திற்கு அதிபதியுமான திருமாலை பாடுபவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும், இறை அருளும் எப்போதும் நிறைந்திருக்கும். அவர்களுக்கு எப்போதும் இன்பமாக வாழும் வாழ்க்கை அமையும்.
விளக்கம் :
இறைவனிடம் எந்த பொன், பொருளையும் வேண்டி பாவை நோன்பினை இருக்கவில்லை. இறைவனின் அருள் ஒன்று மட்டுமே போதும் என கூறிய ஆண்டாள் நாச்சியார், நிறைவு பாடலில் திருப்பாவை பாடல்களை படித்தால் என்ன பலன் கிடைக்கும் என்ற நூல் பலனையும் சொல்லி முடித்துள்ளார். எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதனால் என்ன பலன் நமக்கு கிடைக்கும் என அறிந்த பிறகு தான் பலரும் அந்த காரியத்தில் இறங்கும் அளவிற்கு இன்றைய உலகம் மாறி விட்டது. இதை முன்பே அறிந்தவர் போல ஆண்டாள் திருப்பாவையை படித்தால் என்னவெல்லாம் கிடைக்கும், அதை படிக்கும் அடியவர்களின் வாழ்க்கை எப்படி மாறும் என்பதையும் தெளிவாக விளக்கி உள்ளார்.
More Stories
திருப்பாவை 29
திருப்பாவை 28
திருப்பாவை 27