இசைஞானியார் என்பவர் சைவ சமயத்தில் நாயன்மார்கள் எனப் போற்றப்பெறும் அறுபத்து மூவரில் உள்ள மூன்று பெண்மணிகளுள் ஒருவராவார். இவர் சைவக்குரவரான சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை ஆவார். சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்றமைக்காகவும், சைவநெறியில் நின்றமைக்காகவும் அவரது பெற்றோர்கள் இருவரையுமே நாயன்மார்கள் பட்டியலில் சேக்கிழார் இணைத்துள்ளார்.
திருவாரூரில் வாழ்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகப் பிறந்தார். இவர் கௌதம கோத்திரத்தினை சேர்ந்தவர். திருவாரூரில் உள்ள சிவபெருமானின் மீது பக்தி கொண்டவராக இருந்தார். இசைஞானியார் திருமணப் பருவத்தினை அடைந்ததும், ஞான சிவாச்சாரியார் சிவபக்தரான சடையநாயனார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார்.
திருவாரூர் பெருமான் அடிகளை மறவாத நெஞ்சமுடையார். சடையரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.
இசைஞானியார் – சடையநாயனார் தம்பதியினருக்கு மகனாக சுந்தரமூர்த்தி நாயனார் பிறந்தார்.
இறைவன்: வன்மீகநாதர்
இறைவி : கமலாம்பிகை
தலமரம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம்
குலம் : ஆதிசைவம்
அவதாரத் தலம் : திருவாரூர்
முக்தி தலம் : திருநாவலூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை – சித்திரை
வரலாறு : சடைய நாயனாரின் துணைவியார். சுந்தரரைச் சைவ உலகத்திற்குக் கொடுத்தவர்.
முகவரி : அருள்மிகு தியாகராசர் திருக்கோயில், திருவாரூர்– 610001. திருவாரூர் மாவட்டம்.
More Stories
13. ஏனாதிநாத நாயனார்
12. ஏயர்கோன் கலிக்காம நாயனார்
11. எறிபத்த நாயனார்