April 5, 2025

15. கணநாத நாயனார்

சீர்காழியில் மறைவர் குலத்தில் தோன்றியவர் கணநாதர். அடியார்களுக்கு தொண்டு செய்து உதவிகள் புரிந்து வந்தார். சைவ சமயம் தழைத்தோங்க பயிற்சிப்பள்ளி அமைத்தார். சைவத்திற்கு அடிப்படை தொண்டு. சமயம் வளர தொண்டர்கள் தேவை. தொண்டர்கள் இல்லா அமைப்பு வளராது. நீண்ட நாள்வாழாது என்ற நுட்பத்தைப் புரிந்து கொண்ட கணநாதர் நல்ல தொண்டர்களை உறுவாக்கினார்.

நந்தவனம் அமைப்பது, மலர்கொய்வது, மலர்மாலை கட்டுவது, பெருமான் திருமஞ்சனத்திற்கு உரியதைச் சேகரிப்பது. காலையும் மாலையும் கோவிலை அலகிடுதல், மெழுகிடுதல், தூயக் கைத்தொண்டு செய்தல், திருமுறைகளை எழுதிப் படியெடுத்தல், திருமுறைகளைப் பயிற்றுவிப்போர் என்ற இத்துறைகளுக்கு தொண்டர்களை உருவாக்கினார்.

திருஞானசம்பந்தரைப் போற்றி அவரை தன் குருவாகக் கொண்டவர். அந்தப் பெருமானின் திருவடிகளே தனக்கு காப்பு என்று ஏற்றிப் போற்றி வாழ்ந்து இறையடி சேர்ந்தார்.

இறைவன்: பிரமபுரீஸ்வரர்


இறைவி : பெரியநாயகி


தலமரம் : பாரிசாதம்


தீர்த்தம் : பிரமதீர்த்தம்


குலம் : அந்தணர்


அவதாரத் தலம் : சீர்காழி


முக்தி தலம் : சீர்காழி


செய்த தொண்டு : சிவ வழிபாடு


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : பங்குனி – திருவாதிரை


முகவரி : அருள்மிகு பிரமபுரீஸ்வரர் திருக்கோயில், சீர்காழி– 609110. நாகை மாவட்டம்.