April 5, 2025

22. காரி நாயனார்

திருக்கடவூரில் காரி பிறந்தார். செந்தமிழை நன்கு ஆய்ந்து அறிந்தவர். கவி பாடுவதி வல்லுநர். மூவேந்தரிடமும் சென்று சொல் விளங்க பொருள் மறைந்து நிற்கும்படி பாடி உரியையும் விளக்குவார். மன்னர்கள் மகிழ்ந்து கொடுத்த பரிசினை கொண்டுவந்து சிவபெருமானுக்கு கோவில்களில் திருப்பணி செய்தார். அடியார்க்கு உதவிசெய்தார்.

வட கயிலையை மறவாது தியானம் புரிந்தார். அந்த தொடர் தியானத்தால் சிவபெருமான் அருள் துணைபுரிய உடம்புடன் கயிலைசேர்ந்து இன்புற்றார். சுவர்கத்துக்கு சென்றவர் அங்கு ஒளி உடம்பு பெற்றார்.

இறைவன்: அமிர்தகடேஸ்வரர்


இறைவி : அபிராமியம்மை


தலமரம் : வில்வம்


தீர்த்தம் : சிவகங்கை


குலம்: அந்தணர்


அவதாரத் தலம் : திருக்கடவூர்


முக்தி தலம் : திருக்கடவூர்


செய்த தொண்டு : சிவ வழிபாடு


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மாசி – பூராடம்


முகவரி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர் – 609311. நாகை மாவட்டம்.