May 6, 2025

28. கோட்புலி நாயனார்

திருநாடியத்தான்குடி என்ற ஊரில் வேளாண் குடியில் கோட்புலியார் பிறந்தார். இந்நாயனார் நம்பியாரூரைத் தம் ஊருக்கு எழுந்தருளுமாறு வேண்ட, அவர் இசைந்துவர எதிர்கொண்டு அழைத்துத் தம் மாளிகையிற் சிறப்போடு பூசனையாற்றித் தம் மகளிர் இருவரையும் அடிமைகொள்ளுமாறு அர்ப்பணித்தார். அவர் தம் அர்ப்பணம் நம்பியாரூரரை அம்மகளிரின் ‘அப்பானா’க முறைமை கொண்டு சிங்கடியப்பன், வனப்பகைஅப்பன் எனத் தம்மைக் கூறிக்கொள்ளுமளவிற்கு நம்பியாரூரரை இரங்கச்செய்தது.

சோழமன்னனின் சேனாதிபதியாக பல போர்முனைகளுக்குச் சென்று வெற்றி பெற்று புகழடைந்தவர். மன்னன் தரும் நிதிக் குவியலை சிவபெருமானுக்கு திருஅமுதுக்குரிய செந்நெல் கொடுத்து மகிந்தார். நெல்லைக் குவித்து திருக்கோவில்களில் உள்ளபெருமான் அமுது படிக்கு அளித்து மகிழ்வார்.

ஒரு சமயம் மன்னன் ஆணைபடி போர்முனைக்கு செல்ல வேண்டியிருந்தது. சிவபெருமான் அமுது படிக்காக தாம் திரும்பி வரும் அளவும் போதுமான நெல் வைத்துவிட்டு புறப்பட்டார். அப்போது குடும்பத்தினரை அழைத்து இது சிவனுக்குரியது நான் திரும்பும் வரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டினார்.

ஊரில் பஞ்சம் ஏற்பட்டது. சுற்றத்தார்கள் அமுதுபடிக்காண நெல்லை இறைவனுக்கு படைக்காமலேயே எடுத்து உண்டனர். போர்முனையில் வெற்றி பெற்று மன்னன் கொடுத்த பொற்குவியலுடன் ஊருக்கு வந்தவர் சிவனுக்குரியதை எடுத்து சுற்றத்தார் நைவேத்தியம் செய்யாமல் உண்டதையறிந்து சினம் கொண்டு உறவினர்களை அழைத்து ஒவ்வொருவராய் வெட்டிக் கொன்றான். எஞ்சியிருந்த ஒரு சின்னஞ்சிறு குழந்தையையும் வெட்ட வாளை ஓங்க காவலன் ஐயா இச்சிறுகுழந்தை என்ன செய்தது. கொல்லாதீர். இந்த குழந்தை உணவு உண்ணவில்லை. உணவு உண்ட அதன் தாயின் பாலை அருந்தியதுதான் குற்றம் எனக்கூறி வாளினால் வெட்டினார்.

சிவபெருமான் தோன்றி உன்வாளினால் வெட்டுண்ட சுற்றத்தினர் பாவத்தினின்றும் விடுபெற்று பொன்னுலகில் இன்புறுவர். நீயும் சிவபதம் அடைவாயாக என்றார்.

இறைவன்: இரத்தினபுரீஸ்வரர்


இறைவி : கமலாம்பிகை


தலமரம் : மாவிலங்கை


தீர்த்தம் : சூரிய தீர்த்தம்


குலம் : வேளாளர்


அவதாரத் தலம் : திருநாட்டியத்தான்குடி


முக்தி தலம் : திருநாட்டியத்தான்குடி


செய்த தொண்டு : சிவ வழிபாடு


குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆடி – கேட்டை


முகவரி : அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருநாட்டியத்தான்குடி, (வழி மாவூர்)– 610202. திருவாரூர்மாவட்டம்.