“என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன் அடியார்க்கும் அடியேன்” – திருத்தொண்டத் தொகை.
சடைய நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். திருநாவலூரிலே ஆதிசைவ மரபிலே தோன்றியவர் சடையனார். திருவாரூர் கவுதம கோத்திர ஞான சிவாச்சாரியாரின் மகள் இசைஞானியரை மணந்து உலகில் மெய்ஞான ஒளியைப் பரப்பும் நம்பியாரூரரை மகவாகப் பெற்றார். இறைவனடி சேர்ந்தார்.
இறைவன்: பக்தனேஸ்வரர்
இறைவி : மனோன்மணி
தலமரம் : நாவல்
தீர்த்தம் : கோமுகி
குலம் : ஆதிசைவர்
அவதாரத் தலம் : திருநாவலூர்
முக்தி தலம் : திருநாவலூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மார்கழி – திருவாதிரை
முகவரி : அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர் – 607204. விழுப்புரம் மாவட்டம்.