நடுநாட்டை ஆண்ட மன்னர் நரசிங்க முனையரையர். அவர் திருவாரூரில் வாழும் ஆரூராரை அன்பினால் மகன்மையாகக் கொண்டார். ஆதிரை சிவனுக்குரிய நட்சத்திரம். அன்று வழிபடுதல் சிறந்த பலனாகும். மார்கழி திருவாதிரையில் கூத்தபிரான் சிறப்பு வழிபாட்டுடன் வீதியுலா வருவது சிறப்பானது. சிவன்கோயிலின் சிவச் செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித் திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.
நரசிங்க முனையரையர் ஆதிரை தோறும் அடியவர்களை வரவேற்று அன்னம் பாலிப்பு செய்து பொற்காசு கொடுத்து தொண்டு செய்தார். நாட்டில் வளம் பெருகியது. மக்கள் குறையின்றி வாழ்ந்தனர். எப்போதும்போல் அந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாடினர். அடியார் திருக்கூட்டத்தில் ஒரு காமுக வேடம் கொண்ட ஒருவனும் கலந்து கொண்டான். மற்றவர்கள் அவரைக்கண்டு ஒதுங்கினார்கள்.
நரசிங்க முனையரையர் அடியவர்களை நோக்கி நீங்கள் அவரை இகழக்கூடாது. திருநீறு அணிந்தால் யாராயிருந்தாலும் அவரை நாம் போற்றி பூசிக்க வேண்டும் என்று கூறி அக்காமுகருக்கு இருமடங்கு பொன் கொடுத்து அனுப்பினார். பல ஆண்டுகள் அடியார் தொண்டும் இறைதொண்டும் செய்து இறையடியை அடைந்தார்.
இறைவன்: பக்தஜனேஸ்வரர்
இறைவி : மனோன்மணி
தலமரம் : நாவல்
தீர்த்தம் : கோமுகி
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : திருநாவலூர்
முக்தி தலம் : திருநாவலூர்
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மார்கழி – திருவாதிரை
முகவரி : அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில், திருநாவலூர் – 607204.
விழுப்புரம் மாவட்டம்