மங்கையற்கரசியார் பழையாறையை ஆட்சி செய்த சோழமன்னனுக்கு மகளாகப் பிறந்தார். இயற்பெயர் மானி என்பதாகும். அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் இருந்தாா். மணிமுடிச்சோழனின் மகளான மங்கையர்கரசி சிவபெருமானை தன் இளமைபருவத்திலிருந்தே வழிபட்டு ஆனந்தம் அடைந்திருந்தார். கூன் பாண்டிய மன்னனுக்கு மனைவியானார். பாண்டிய மன்னன் சமணசமயத்தைச் சார்ந்து ஒழுகினான். சமண அடிகள்மாரை அவன் பெரிதும் மதித்தான். குடிகளெல்லாரும் சமணராயினர். அரசவையில் குலச்சிறையார் என்னும் ஓரமைச்சர் தவிர மற்றையோரெல்லாம் சமண சமயத்தவராகவே இருந்தனர். நாட்டில் இவ்வாறு சமண சமயத்திற்கு செல்வாக்கு அதிகம் இருப்பதை அறிந்த சைவாரான மங்கையர்க்கரசியார் மனம் வருந்தினார். மீண்டும் பாண்டிய நாட்டில் சைவம் செல்வாக்கு பெற வேண்டும் என்று விரும்பினார். நாட்டில் அமைதியும் நன்மையும் இல்லாமல் துன்பத்துடன் தீமை நடந்தது.
திருஞான சம்பந்தரை பற்றி அறிந்த மங்கையர்கரசியாரும் அமைச்சர் குலச்சிறையாரும் அவரை அழைத்து பாண்டிய நாட்டில் ஏற்பட்டுள்ள துயரத்தை போக்கவும் தன் கணவர் கூன் பாண்டியனை சமணத்தில் இருந்து மாற்றவும் சம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு வரவேண்டினர். ஞான சம்பந்த பெருமான் மதுரைக்குவந்து ஆலவாய் பெருமானை பார்க்க விழைகிறார். அம்பிகையைக் கூடப்பாடாத சம்பந்தர் அங்கு பாடிய பதிகத்தில் மங்கையர்கரசியரைப்பற்றி இரண்டு வரிகள் பாடினார். வளவர் திருக்கொழுந்து என்ற பாராட்டைப் பெற்றார். கூன் பாண்டியனின் வெப்ப நோயைத் தீர்த்து அவனை நின்ற சீர் நெடுமாறனாக மாற்றியவர்.
பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க பாடுபட்டவர். பல ஆண்டு சைவம் தழைக்கசெய்து இறையடி சேர்ந்தார்.
இறைவன்: சோமநாதர்
இறைவி : சோமகமலாம்பிகை
குலம் : மன்னர்
அவதாரத் தலம் : கீழப்பழையாறை
முக்தி தலம் : மதுரை
செய்த தொண்டு : குரு வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : சித்திரை – ரோகிணி
முகவரி : அருள்மிகு சோமேசர் திருக்கோயில், கீழப்பழையாறை – 612001. கும்பகோணம் வட்டம்.
More Stories
63. விறன்மிண்ட நாயனார்
62. வாயிலார் நாயனார் (தபோதனர்)
61. மெய்ப்பொருள் நாயனார்