கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரிலே இவர் பிறந்தார். அவர் அவதரித்த குடி பரம்பரையாக அரசர்க்குச் சேனாதிபதிப் பதவி வகிக்கும் குடி. வேளாண்மையால் விளைந்த செல்வவளம் பெருகியவராயுமிருந்தார். அந்தக் குலத்தின் தலைவர், மன்னரின் படைத்தளபதி. சிறந்த சிவபக்தர். சிவமே மெய்ப்பொருள் என்று அறிந்தார். அதுவே எல்லாமென உணர்ந்தார். சிவனடியார்கள் என்ன நினைப்பார்களோ அவர்களின் குறிப்பறிந்து தொண்டு செய்து அவர்தம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தன்மையுடையவர்.
கஞ்சாறர் பேறு பல பெற்றவராயிருந்தும் பிள்ளைப் பேறில்லாத குறையொன்றிருந்தது. இக்குறை தீர இறைவனை வேண்டிப் பிராத்தித்தார். இறையருளால் அவர்தம் மனைவியார் பெண் மகவொன்றை பெற்றெடுத்தார். தவம் மேற்கொண்டு பெருமான் கருணையினால் பெண் குழந்தையை அடைந்தார். அப்பெண் வளர்ந்து பருவமடைந்தார். நீலகண்டபெருமான்மேல் அளவுகடந்த பக்திகொண்ட ஏயர்கோன் கலிக்காமர் என்பவருக்கு பெரியோர்களால் மணம் பேசி முடிக்கப்பட்டது.
மகிழ்ச்சி வெள்ளம் கரைபுறண்டு ஓடியது. மணமகள் வீடு, திருமணக்கோலம் பூண்டது. மானக்கஞ்சாறனார் தன் ஒரே செல்ல மகளின் மணத்தை ஊர் போற்ற சிறப்புற நடத்த ஏற்பாடுகளைச் செய்தார். பெருமான் தொண்டர்கள் விருப்பம் எதுவாயினும் குறிப்பறிந்து கொடுத்து மகிழும் மானக்கஞ்சாறனார் பண்பை உலகறியச் செய்ய முடிவு செய்தார். மாவிரதியர் கோலத்தில் கஞ்சாறு நோக்கிப் புறப்பட்டார். அடியாரை மானக்கஞ்சாறனார் வரவேற்று உபசரித்தார்.
மானக்கஞ்சாறனார் இல்லத்தில் உள்ள அனைவரையும் அடியாரை வணங்கி ஆசி பெறச் சொன்னார். மணப்பெண்ணையும் வணங்கச் சொன்னார். அவரும் வணங்கினார். தவமாவிரதியர் கோலம் கொண்ட அடியவர் மணப்பெண்ணின் மயில் போன்ற சாயலும் மேகம் போன்ற கருத்த அடர்ந்த நீண்ட கூந்தல் பஞ்சவடிக்கு ஆகும் என்றார். அடியவர் தம் குறிப்பறிந்து கொடுக்கும் தன்மையுடைய மானக்கஞ்சாறனார் மகளின் திருமணநாள் என்றும் பாராமல், மணமகன் வீட்டார் என்ன சொல்வார் என்றும் பாராமல், மணமகன் என்ன நினைப்பார் என்றும் பாராமல், அடியவர் குறிப்பறிந்து ஈயும் பண்பு தலைதூக்க ஒரு கத்தியை எடுத்து வந்து மணமகளின் அலங்கரிக்கப்பட்ட கூந்தலை அடியுடன் அறுத்து அடியவரின் கையில் கொடுத்து வணங்கினார்.
அதை வாங்குவதுபோல் நின்ற அடியவர் அம்பிகையுடன் விடைமேல் தோன்றிக் காட்சி கொடுத்தார். மணமகள் கூந்தல் பெருமான் கருணையினால் வளர்ந்தது. அன்பனே நம் பாலும், நம் அடியர்பாலும் நீர் கொண்ட மெய்யன்பை அறிந்து மகிழ்ந்தோம். உமக்கு நம் புவனத்தில் இடம் கொடுத்தோம் என அருள் செய்தார்.
மணக்கோலத்தில் ஏயர்கோன் கலிக்காமர் வந்தார். நிகழ்வுகளைக் கேட்டு மாவிரதியாய் வந்த எம்பெருமானை வணங்கும் பேறு இழந்தோமே என வருந்தினார்.
இறைவன்: பஞ்சவடீஸ்வரர்
இறைவி : கல்யாணசுந்தரி
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : ஆனந்ததாண்டவபுரம்
முக்தி தலம் : ஆனந்ததாண்டவபுரம்
செய்த தொண்டு : அடியார் வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மார்கழி – சுவாதி
முகவரி : அருள்மிகு பஞ்சவடீஸ்வர சுவாமி திருக்கோயில், ஆனந்ததாண்டவபுரம்,
(நீடூர் வழி) – 609103. மயிலாடுதுறை வட்டம்.
More Stories
63. விறன்மிண்ட நாயனார்
62. வாயிலார் நாயனார் (தபோதனர்)
61. மெய்ப்பொருள் நாயனார்