பாண்டிய நாட்டிலே உள்ள மதுரை மாநகரில் வணிக குலத்திலே அவதரித்தார் மூர்த்தியார். இறைபற்று தவிர வேறு பற்று எதுவும் இல்லாதவர். லிங்கத்திருமேனிக்கு சந்தனக்காப்பு செய்து வழிபடுவது இவர் விருப்பமாகும். வடுக கருநாட்டு மன்னவன் மண் ஆசையால் மதுரைமீது படையெடுக்க மதுரை மன்னனால் ஆற்றல்மிக்க அந்த சேனையை எதிர்கொள்ளமுடியாமல் தோற்றான். கருநாட்டு மன்னன் சமண சமயம் சார்ந்தவன். சிவனடியார்களுக்குத் துன்பம் தொடர்ந்து கொடுத்துவந்தான்.
அவ்வூரில் இருந்த மூர்த்தியாருக்கும் பல இடர்கள் செய்தான். அவற்றையெல்லாம் பொறுத்து தன் திருத்தொண்டினை குறைவரச் செய்து வந்தார். இருப்பினும் சந்தனக் காப்பு செய்ய சந்தனம் கிடைக்காமலிருக்க எல்லா வகையிலும் தடை செய்தான். மூர்த்தியார் எங்கெங்கோ சந்தனக் கட்டைக்கு அலைந்தார். கிடைக்கவில்லை. சேர்ந்து கோவிலை அடைந்தார்.
நாள்தோறும் சொக்கலிங்கப் பெருமானுக்கு சந்தனம் அறைக்கும் கல்லைப் பார்த்தார். அறைக்கும் கரத்தைப் பார்த்தார். சந்தனக் கல் உள்ளது. அறைக்கும் கரம் உள்ளது. கட்டைதானே இல்லை. எம்பெருமானே என் கரத்தையே சந்தனக் கட்டையாக கருதி சந்தனக் கல்லில் அறைகின்றேன் என கையை கல்லில் அறைத்தார். சதை கிழிந்தது. நரம்புகள் துண்டிக்கப்பட்டது. ரத்த வெள்ளம் கல் முழுவதும் பரவியது.
அப்போது வான் வழி ஒலித்தது. “மெய்யன்பனே என்பால் கொண்ட அன்பால் இப்படிச் செய்யாதே, உனக்கு துன்பம் தந்தவன் ஆண்ட நாடு உன் வசமாகும். அநீதியை விலக்கி நீதியை நிலைநாட்டி நல்லாட்சி செய்வாயாக, முறையாக திருத்தொண்டு செய்து நம் சிவலோகம் வருவாயாக” என்று ஒலித்தது. கை முன்போல் ஆயிற்று. அவர் மேனி ஒளி பெற்றது.
அடியார்க்கு தீங்கு செய்த மன்னன் இரவு உயிர் துறந்தான். மன்னருக்கு வாரிசுகள் இல்லாததால் ஒரு யானையிடம் மலர் மாலை தந்து அது யார் கழுத்தில் அதைப் போடுகிறதோ அவரே மன்னன் என்ற வழக்கத்தின்படி மூர்த்தியார் கழுத்தில் மாலை விழ மன்னரானார். திருநீறே திருமுழுக்காகவும், உத்திராட்சம் அணிகலன்களாகவும், சடைமுடியே மணிமுடியாகவும் விளங்க அமைச்சர்கள் உடன்பட அனைவரும் ஒத்துக் கொண்டதால் மணிமகுடம் சூட்டப்பெற்று நெடுங்காலம் நீதி வழுவாது ஆட்சிபுரிந்து எம்பெருமான் திருவடி சேர்ந்தார்.
இறைவன்: சோமசுந்தரர்
இறைவி : மீனாட்சியம்மை
தலமரம் : தில்லை
தீர்த்தம் : சிவகங்கை
குலம் : அந்தணர்
அவதாரத் தலம் : மதுரை
முக்தி தலம் : மதுரை
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : ஆடி – கிருத்திகை
முகவரி : அருள்மிகு மீனாட்சியம்மை திருக்கோயில், மதுரை – 625001.
மதுரை மாவட்டம்.
More Stories
63. விறன்மிண்ட நாயனார்
62. வாயிலார் நாயனார் (தபோதனர்)
61. மெய்ப்பொருள் நாயனார்