சென்னை மயிலாப்பூரில் வேளாளர் குலத்தில் தபோதனர் பிறந்தார். வழிபாடு இருவகை. புறவழிபாடு. அகவழிபாடு. அகவழிபாடு இல்லாமல் புறவழிபாடு பயனில்லாதது. அந்தர் யாகம் எனும் அகவழிபாடில்லாத சிவபூசை சிறப்பாகாது.
இவரை வாயிலார் என்றும் கூறுவர். வாயிலார் அகவழிபாட்டிலே ஒன்றி நின்றவர். இறைவனை ஒருபோதும் மறவாமையாகிய மனக் கோவிலில் இருத்தி உணர்வு எனும் விளக்கேற்றி இடையறாத ஆனந்தத்தில் திளைத்து அன்பு எனும் அமுதை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டார். இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து இறைபதம் எய்தினார்.
இறைவன்: கபாலீஸ்வரர்
இறைவி : கற்பகாம்பாள்
தலமரம் : புன்னை
குலம் : வேளாளர்
அவதாரத் தலம் : திருமயிலை
முக்தி தலம் : திருமயிலை
செய்த தொண்டு : சிவ வழிபாடு
குருபூசை நாள் (முக்தி பெற்ற மாதம்/நட்சத்திரம்) : மார்கழி – ரேவதி
முகவரி : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலை, சென்னை – 600004. சென்னை மாவட்டம்.
More Stories
63. விறன்மிண்ட நாயனார்
61. மெய்ப்பொருள் நாயனார்
60. மூர்த்தி நாயனார்